கடந்த சில மாதங்களுக்கு முன், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முக்கிய கூட்டத்தில் பேசிய போது, அவரது மொபைல் போனில் அழைத்த அழகிய பெண் குரல் "உங்களுக்கு வீட்டு கடன் வேண்டுமா? என பேசி தொந்தரவு செய்வதாக குறிப்பிட்டார் . அதன் பின் மொபைல் போனில் தேவையற்ற விளம்பர அழைப்புகள் வராமல் இருப்பது குறித்து தொலைத்தொடர்பு துறையினர் உரிய முயற்சி எடுத்தனர்.
கடந்த சில நாட்களாக மொபைல் போனில் அழைக்கும் பெண் குரல், "காதலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? காதல் அனுபவம் உண்டா? காதலை வரவேற்பவரா? போன்று காதல் தொடர்பான அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கின்றனர்.
காலை 6 மணிக்கே காதல் தொடர்பான அழைப்பு வருவதால் பலர் பாதிக்கின்றனர். 70 வயதை கடந்த மூதாட்டிகள் பலரும், தகவல் தொடர்புக்காக மொபைல் போன் வைத்துள்ளனர். இவர்கள் காலையில் காதல் பற்றிய கேள்விகளை கேட்டவுடன் போனை ஆப் செய்து, விரக்தியின் உச்சிக்கே செல்கின்றனர். விளம்பரத்திற்காக மொபைல் போனில் அழைப்புகள் வருவது தொடர்வதால் பருவ வயதுடையோர் தவறான பாதையில் சென்று விட நேரிடுமென, பெற்றோரும் கலக்கத்தில் உள்ளனர். இது போன்ற தர்மசங்கடமான நிலையை தவிர்க்க, தொலைத்தொடர்பு துறையினர் முன் வர வேண்டும்.
Article courtesy from : http://www.dinamalar.com on 24Aug2010 0010 hrs IST.--
Donate Blood! Save Life.

No comments:
Post a Comment